கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த இந்திரா நகர் பகுதியில் குறிஞ்சி நிலம் முன்னேற்ற கழக பொறுப்பாளர் நியமனம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழக கொடி அறிமுகம் செய்யப்பட்டு கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்டனர்.
தாய்நாடு மக்கள் கட்சி தலைவர் ஏ.கே.பூமிராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மலைகுறவர் இன மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்
மத்திய மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டில் தனி அங்கீகாரம் வழங்கி அதற்கான பிரிவு ஏற்படுத்த வேண்டும்
மலைகுறவர் மக்களுக்கு என்று தனி சுடுகாடு அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்
உள்ளாட்சி தேர்தல்களில் எங்களுக்கு தனி ஒதுக்கிடு அளிக்க வேண்டும்
மேலும் ஜாதி சான்று அடிப்படை வசதிகள் சாலை வசதிகள் வீட்டு வசதிகள் போன்ற அடிப்படை தேவைகள் கூட இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது காலம் முழுவதும் வெறும் கோரிக்கை அளிக்கக்கூடிய சமூகமாகவே இருந்து கொண்டு வருகிறோம் எங்களுக்கு என்று எந்த ஒரு அரசியல் அமைப்புகளோ எந்த அரசியல் கட்சி தலைவர்களோ எந்த ஒரு நன்மைகளும் இதுவரை செய்தது கிடையாது
ஜாதி சான்று முறையாக வழங்கப்படாத காரணத்தினால் பள்ளி கல்வியை கடந்து கல்லூரியில் படிப்பை தொடர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்
எனவே எங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்த்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று ஒருமனதாக கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குறிஞ்சி மூர்த்தியார் திருச்சி அன்பழகன் வசந்தா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment