கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.இந்த வார்டுகளில் குப்பை அள்ளுதல், ப்ளீச்சிங் பவுடர் போடுதல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கிப்போய் உள்ளன. இதனால் அதிமுக வார்டு கவுன்சிலர்கள் குடியிருப்பு வாசிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நிர்வாக ரீதியான அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் அவர்கள் அலட்சியம் காட்டி வருவதாகவும் நிரந்தர செயல் அலுவலரை நியமிக்காமல் போனதால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது எனவும் அதிமுக கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் மாவட்ட நிர்வாகம் எந்தவித அக்கறையும் கொள்ளாமல் புவனகிரி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிக்காமல் கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ளதாக அவர்கள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர். பல மணி நேரமாக புவனகிரி பேரூராட்சி அலுவலக வாசல் முன்பு தரையில் அமர்ந்து கருப்புக்கொடி ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டு வந்தபோதிலும் அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. இதனால் புவனகிரி பேரூராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment