சாலை அமைந்துள்ள பகுதி மிக தாழ்வாகவும் அதிக தண்ணீர் தேங்கும் இடமாகவும் இருந்து வருகிறது. மேலும் பெரியகுப்பம் கிராமப்பகுதி மற்றும் அதற்கு மேற்குப் பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் மழை வடிகால் நீர் இப்பகுதிக்கு வந்து தேங்குகிறது. அது மட்டுமல்லாமல் மழை வெள்ள காலங்களில் அருகில் செல்லும் வெள்ளாற்றின் தண்ணீரும் தாழ்வான கரையின் வழியாக புகுந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், விவசாய நிலங்களில் விளைவிக்கப்படும் விளைப் பொருட்கள் போன்றவை கடும் பாதிப்படைந்து பெரும் இழப்பும் ஏற்படுகிறது.
அதனால் சாலைப் பணி ஆரம்பிக்கும் போதே இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி விட்டு பின்பு சாலைப் பணியை தொடருங்கள் என்று கூறி வருகின்றனர். ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளோ கிராம மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்ததாக தெரியவில்லை. விரைந்து நான்கு வழிச்சாலைப் எனவே பெரிய குப்பம் கிராமப் பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தந்து விட்டு சாலை பணியைத் தொடர வேண்டும் என பல்வேறு கிராம மக்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment