விருத்தாசலத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 April 2023

விருத்தாசலத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம்

விருத்தாசலத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில்  தனியார் விடுதியில் மாவட்ட தலைவர்  கதிர்வேல் தலைமையிலும், மாவட்ட செயலாளர் தங்க.ராஜீவ் காந்தி, மாவட்ட பொருளாளர் கணேசன் முன்னிலையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் மங்கா பிள்ளை, மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர்  இராமைய்யன், மாவட்ட இளைஞரணி பொருப்பாளர் ஆறுமுகம், விருத்தலம் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், விருதை ஒன்றிய துணை தலைவர் ஜெயசீலன் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய பொருப்பாளர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியன்.கம்மாபுரம் ஒன்றிய தலைவர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 


பட்டியிலனமக்களின் ஒப்பற்ற தலைவர்  பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் 132-வது பிறந்தநாள் பெருவிழாவை கிராமங்கள் தோறும் சிறப்பாக கொண்டாடுவது, ஏப்ரல் 14-அன்று இந்திய குடியரசு கட்சி சார்பில் கடந்த மூன்று மாதங்கள் ஆகியும் புதுக்கோட்டை வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த குற்றவாளிகளை கைது செய்யத்தை கண்டித்தும், கடந்த நிதிநிலை அறிக்கையில் நூற்றாண்டுவிழா காண இருக்கின்ற ஆதிதிராவிட நல பள்ளி விடுதிகளை பள்ளி கல்வித் துறையோடு இணைப்பதை கைவிட கோரியும், SC/ST மக்களின் வேலைவாய்ப்பு பத்தாயிரத்திற்கு மேற்ப்பட்ட பின்னடைவு பணியிடங்கள் ஒராண்டுக்குள் நிரப்புவதாக கூறிய தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் நிரப்பாதை கண்டித்தும், தொடரும் ஆணவப் படுகொலைகள் தடுக்க தனி சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்வதென இக் கூட்டம் தீர்மானிக்கிறது.

No comments:

Post a Comment