கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் சிதம்பரம் - கடலூர் சாலை சிதம்பரம் வண்டிகேட் அருகில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதனால் அப்பகுதியில் ஏற்படும் வாகன விபத்துக்களை தடுக்க சிதம்பரம் சார் ஆட்சியர் சுவேதா சுமன் IAS., சிதம்பரம் உட்கோட்ட உதவி காவல். கண்காணிப்பாளர் B.ரகுபதி IPS மற்றும் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் ஆகியோர் மேற்படி விபத்து ஏற்படக்கூடிய பகுதியை கூட்டு ஆய்வு செய்து வாகன விபத்துக்களை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வாகன விபத்துக்களை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

No comments:
Post a Comment