ரூபாய் 5.85கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து கட்டிட அடிக்கல் நாட்டு விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 April 2023

ரூபாய் 5.85கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து கட்டிட அடிக்கல் நாட்டு விழா


ரூபாய் 5.85கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து கட்டிட அடிக்கல் நாட்டு விழா நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு அவர்கள் தொடங்கி வைத்தார்


கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் ₹5.85 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையம் கட்டிட  அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்.


மேலும் வடலூர் வள்ளலார் திடல் அருகே உள்ள பழைய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை ஆய்வு செய்தார்
பின்னர் குறிஞ்சிப்பாடி பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்டார்
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியன் திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் நகரச் செயலாளர் தமிழ்ச்செல்வன்நகராட்சி ஆணையர் பானுமதி பொறியாளர் சிவசங்கரன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.


கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு அனைவரும் நனைந்தபடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் பின்னர் அவசர அவசரமாக  அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

No comments:

Post a Comment

*/