சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி வாகனங்களை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 24 April 2023

சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி வாகனங்களை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்.


சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி வாகனங்களை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்.




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் சமகால இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை வழங்காத என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று நிலங்களை சமன்படுத்த வந்த ஜேசிபி எந்திரம் உள்ளிட்ட  கனரக வாகனங்கள் மற்றும் அதிகாரிகளை  கிராம மக்கள் விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் சம்பந்தப்பட்ட கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் 


புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.


போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் வந்துள்ளார் என்று தெரிந்தவுடன் நிலம், மனைகளை சமன்படுத்திக் கொண்டிருந்த என்எல்சி அதிகாரிகள் மற்றும்  வாகனங்கள் உடனடியாக அவ்விடத்தை விட்டு காணாமல் சென்றனர்.

 


பின்னர் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி எம் எல் ஏ அருண்மொழிதேவன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் தமிழக அரசு சட்டசபையில் கூறியது போல முத்தரப்புக் குழுவை அமைத்து விவசாயிகள், கிராம மக்களின் குறைகளைக் கேட்டறிந்து பின்பு அவர்களுக்கான சரியான சமகால இழப்பீடு வழங்கிவிட்டு பின்பு பணிகளைத் துவங்க வேண்டும். இதனை பலமுறை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் இன்று அதிகாரிகள் எவ்வித அறிவிப்பும்கொடுக்காமல் திடீரென வந்துள்ளது பலருக்கும் வேதனை அளிப்பதாக இருக்கிறதுஎன்று தெரிவித்தார். 



முக்கியமாக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில் அது 21 ஆம் தேதியுடன் நிறைவடைந்த பிறகு அதுவரை அமைதியாக இருந்த என்எல்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் சட்டமன்றம் முடிவுற்றபின் தற்போது வளையமாதேவி கிராமப் பகுதியில் திடீரென்று உள்ளே நுழைந்து பணிகளைத் துவக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அப்பகுதி விவசாயிகளும்,கிராமமக்களும் தெரிவித்துள்ளனர்.. இந்நிலையில் தற்போது அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

No comments:

Post a Comment

*/