கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மதுராந்தகநல்லூர் கிராமத்தில் வயல்வெளிப் பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்தது. அப்பகுதியில் வயல்வெளி வேலைக்கு சென்றவர்கள் இறந்து கிடந்த பெண் குறித்து ஒரத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் அடையாளமே தெரியாத அளவில் அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இறந்து கிடந்த பெண்ணின் உடம்பில் காயங்களுடன் இறந்து கிடந்தததால் இது கொலையாக இருக்குமோவென அப்பகுதியினர் சந்தேகப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் வயல்வெளிப் பகுதியில் மதுப் பிரியர்கள் வெட்டவெளியில் மது அருந்தும் பகுதியாக இருப்பதால் இந்தப்பெண் இறந்தது எப்படி என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது இச் சம்பவம் நடந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இதுகுறித்து இந்தப்பெண் இறந்தது எப்படி என்று காவல்துறையும் துருவித் துருவி விசாரணை செய்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment