குமராட்சி ஊராட்சி மன்ற தலைவரும் வர்த்தக சங்கத் தலைவருமான கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் வர்த்தக சங்க கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் தீர்மானங்களை செயலாளர் மணிவண்ணன் வாசித்தார் முன்னதாக ஒருங்கிணைப்பாளர் அப்துல்பாசித் அனைவரையும் வரவேற்றினார் கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஆறுமுகம் துரைசிங்கம் பார்த்தசாரதி மணிகண்டன் குமரவடிவு பிரதீப்ஜெயின் அப்துல்ரவுப் ஆகிய அனைவரும் கலந்து கொண்டனர் கூட்டத்தின் தீர்மானங்கள்
1. வருகின்ற மே 5 வணிகர்தினத்தை முன்னிட்டு அனைத்து கடைகளும் விடுமுறை அளித்து ஈரோட்டில் விக்ரமராஜா தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வது
2. குமராட்சியில் தீயணைப்பு நிலையம் 108 ஆம்புலன்ஸ் பொதுக் கழிப்பிடம் நிறைவேற்றிக் கொடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்களுக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் குமராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அவர்களுக்கும் மற்றும் குமராட்சி ஊராட்சி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
3.வணிகர்களிடம் அரசியல் கட்சியினர் கோயில் விழா குழுவினர் நன்கொடை என்கின்ற பெயரில் கட்டாய வசூல் கேட்கக் கூடாது நன்கொடைய சங்கத்தின் மூலமே பெற வேண்டும்
4. குமராட்சி பகுதிகளில் தொடர்ந்து தனியாக வரும் நபர்களிடமிருந்து செல்போன் தாலி சங்கிலி பறிப்பு வாகனத் திருட்டு கோவில் உண்டியல் திருட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது காவல்துறை சம்பந்தப்பட்ட உரியவர்களை கைது செய்தாலும் மீண்டும் தொடர்கதையாக நடைபெறுகிறது ஆகையால் காவலர்கள் இரவு நேரங்களில் ரோந்து வரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது நிறைவாக குட்டிமணி நன்றி உரையாற்றினார்
No comments:
Post a Comment