இது அறிவிக்கப்பட்டு தற்போது இரண்டு ஆண்டுகளைக் கடந்தும்தடுப்பணை எப்போது கட்டப்படும் என ஆதிவராக நல்லூர் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர்கள், விவசாயிகள் வேதனையோடு கேள்வி எழுப்புகின்றனர். கடல் நீர் புவனகிரியில் இருந்து மேற்குப் பகுதியில் 15கிலோமீட்டர் தூரம் உள்ளே புகுந்து விட்டது. இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீரின் தன்மை பாதிப்படைந்துள்ளது.
அந்தத் தண்ணீரை விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத நிலைதான் இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கால்நடைகள் பருகுவதற்குக்கூட தரமற்ற நீராக இருக்கிறது. பு.ஆதிவராகநல்லூர் வெள்ளாற்றில் அமையும் தடுப்பணைக் குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்றன. ஆனாலும்இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தித் தடுப்பணை அமைத்துப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். என புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சட்டசபையில் தடுப்பணை குறித்து கேள்வியும் எழுப்பியுள்ளார். ஆனாலும் தடுப்பணைத் திட்டம் இன்னமும் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் சாதாரணமாக20 அடி ஆழத்தில் நல்ல தண்ணீர் கிடைத்த நிலையில் இன்று நூற்றுக்கணக்கான அடி ஆழம் சென்றாலும் தண்ணீர் உப்பாகத்தான் கிடைக்கிறது. நல்ல தண்ணீர் கிடைக்கவில்லை. தற்போது இப்பகுதிகளில் நீரின் தரம் மாறிவிட்டதால் பலரும் மினரல் வாட்டர் என்ற பெயரில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே தமிழக அரசு உடனடியாக விரைந்து இந்த தடுப்பணை திட்டத்தைத் துவங்கி செயல்படுத்த வேண்டும் என்று இப்பகுதி கிராமத்தினரும், விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment