கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த கங்கைகொண்டான் பேரூராட்சி காங்கிரஸ் கிளை சார்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் எம் பி பதவி பறிக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினரின் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது கங்கைகொண்டான் ஸ்டேட் பேங்க் ளிலிருந்து புறப்பட்டு பேரணி நெய்வேலி நான்கு முனை சந்திப்பு பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளுக்கு சென்று பின்னர் மந்தாரக்குப்பம் புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
பிரச்சாரத்தில் வருகின்ற 15/04/2023 அன்று கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் சிதம்பரத்தில் நடைபெற உள்ள மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்
கம்மாபுரம் வட்டாரத் தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற பேரணியில் தெய்வசிகாமணி , முன்னாள் நகரத் தலைவர் DR செல்வராஜ், நகரச் செயலாளர் வழக்கறிஞர் இராமச்சந்திரன், ராமகிருஷ்ணன் குழந்தைவேல் ,சக்கரவர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment