கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் எம்ஜிஆர் நகரில் சகோதரி மகாலட்சுமி வீட்டில் கணேசன் (24) என்பவர் தங்கியிருந்து கார்பெண்டர் வேலை செய்து வந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக அனைவரும் கூறுகிறார்களே என்று கடந்த 2017 ஆம் ஆண்டு துபாய் நாட்டிற்கு வேலைக்கு செல்வதறகாக பலரிடமும் கடன் வாங்கி சென்றார். தினமும் தனது வேலை நேரம் போக குடும்பத்தில் பெற்றோருடன் செல்ஃபோன் மூலம்
பேசி வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் தனது உறவினர்கள், உறவினரின் பிள்ளைகள் என அனைவரிடம் சகஜமாகவும் , அன்பாகவும் பேசி அவர்களது பிறந்தநாள்,திருமண நாட்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் இருப்பது போலவே நினைத்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் தான் வேலை செய்த இடத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு அறையில் தங்கி இருந்த கணேசன் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனைக் கண்ட அவரது நிறுவனத்தினர் அங்குள்ள காவல் துறைக்கு தகவல் தெரிவித்து அதன் அடிப்படையில் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். கணேசன் இறந்தது குறித்து அவரது நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீமுஷ்ணத்திலுள்ளஅவர் சகோதரி மகாலட்சுமி மற்றும் கணேசனின் குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ந்து போன அவர்கள் இறந்த கணேசன் உடலை சொந்த ஊர் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
இதனால் அவரது உறவினர்கள் உள்ளிட்ட பலரும் வேதனையும், துயரமும் அடைந்துள்ளனர். இறந்த கணேசனின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வரவும், அவரது மர்மமான இறப்புக்கு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.இறந்த கணேசனின் சொந்த ஊரானது விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள
நின்னையூர் கிராமமாகும்.பல்வேறு கனவுகளோடு வெளிநாடு சென்ற கணேசன் தனக்குத் தெரிந்த கார்பெண்டர் வேலையை செய்து குடும்பத்தின் வறுமையை போக்கிவிடலாம் என்று நினைக்கையில் விதி இப்படி விளையாடிவிட்டது. இறுதியாக அவர் வசித்து வந்தஸ்ரீமுஷ்ணம் எம்ஜிஆர் நகர் பகுதி மட்டுமல்லாமல் விழுப்புரம் மாவட்டம் அவர் பிறந்த ஊரான நின்னையூர் கிராமமும் பெரும் சோகத்திலும் வேதனையிலும் ஆழ்ந்துள்ளது.
No comments:
Post a Comment