அந்த மனுவில்,நிலம் கொடுத்த அனைவருக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இருந்தன. இவற்றைப் பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த தகவலை நேற்று புவனகிரியில் நடைபெற்ற பாஜக சக்திகேந்திரா கூட்டத்தில் டெல்லி சென்று வந்த விவசாயிகள் இளைஞர்கள் மற்றும் பாஜகவினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கத்தாழை விவசாயி மனவாளன், பாதிக்கப்பட்ட கிராம மக்களின் சார்பாக டெல்லி சென்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத்ஜோஷியை சந்தித்து கோரிக்கை மனு அளித்து பிரச்சினைகள் குறித்து விளக்கிட உதவி செய்த பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 1989 முதல் இன்று வரை நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலை தரவில்லை என்பதை வலியுறுத்தினோம் என தெரிவித்தார்.
கத்தாழை கிராமத்தில் இருந்து டெல்லி சென்ற இளைஞர் கவிச்செல்வன் கூறுகையில்,டெல்லிக்கு நேரடியாக சென்று நிலக்கரித்துறை அமைச்சரை சந்தித்து 10 அம்ச கோரிக்கைகளை வைத்து வலியுறுத்தினோம். இதில் முக்கிய கோரிக்கை 2023 வரை பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்து ஒருவர் கூட வேலைவாய்ப்புக்கு செல்லவில்லை. அதிக இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. அதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினோம். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார் என கூறினார். இந்த சந்திப்பின் போது கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மருதை, உள்ளிட்ட கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நகர அணி பிரிவு நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment