வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களின் ஆணையின்படி, குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடலூர் நகரம் சார்பில் நகர கூட்டம் மங்கையர்க்கரசி திருமண மண்டபத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் பொறியாளர் வி.சிவக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வடலூர் நகர மன்ற தலைவர் அண்ணன் சு.சிவக்குமார் அவர்கள், நகர மன்ற துணைத் தலைவரும், நகர கழக அவைத்தலைவருமான சுப்புராயலு அவர்கள், வடலூர் நகர கழக செயலாளர் தன.தமிழ்செல்வன் அவர்கள் மற்றும் வடலூர் நகர மன்ற உறுப்பினர்கள், நகர கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், மாணவரணி, இளைஞர் அணி, மகளிர் அணி, மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவினை சிறப்பாக கொண்டாடுவதெனவும், மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றிக்கு உறுதுனையாய் உழைத்திட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றி சிறப்புரையாற்றினார்
No comments:
Post a Comment