சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 10 March 2023

சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


நெய்வேலி நகரத் தலைவர் தெய்வசிகாமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எல் ஐ சி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிகளில் அதானி அம்பானி குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்த ஒன்றிய மோடி அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. 


சக்கரவர்த்தி ,மோகன் ராமகிருஷ்ணன், சிவசண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் என்.வி செந்தில்நாதன் பாலையா சாம்பமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார் வழக்கறிஞர் ராமச்சந்திரன் மற்றும் மாநில பேச்சாளர் மோகன்தாஸ் ஆகியோர் நன்றியுரை வழங்கினர். 


இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment