நெய்வேலி அடுத்த வடக்குத்து அண்ணா நகர் பகுதியில் உலக மகளிர் தின விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 March 2023

நெய்வேலி அடுத்த வடக்குத்து அண்ணா நகர் பகுதியில் உலக மகளிர் தின விழா

நெய்வேலி அடுத்த வடக்குத்து அண்ணா நகர் பகுதியில் உலக மகளிர் தின விழா

 


கடலூர் மாவட்டம் வடக்குத்து அடுத்த அண்ணா கிராமம் பகுதியில் உலக மகளிர் தின சிறப்பு கூட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம் விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் எண்பதாவது சிறப்பு நிகழ்ச்சியாக உலக மகளிர் தினம் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. 

 

மாவட்ட மகளிர் பாசறை தலைவர் தமிழேந்தி தலைமையில் மாவட்ட மகளிர் அணி தலைவர் முனியம்மாள் மாவட்ட மகளிர் அணி செயலாளர் குண சுந்தரி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சத்யா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 



ஊராட்சி மகளிர் அணி தலைவர் விஜயா வரவேற்புரை ஆற்றினார் கான குயில் கவிதா வடலூர் ஜெயஸ்ரீ மகளிர் தின சிறப்புக்கள் குறித்து உரையாற்றினர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் அன்னை மணியம்மையார் வீராங்கனையாக தொண்டறம்  ஆற்றிய பங்கு பணிகள் பற்றியும் உலக மகளிர் நாள் வரலாறு குறித்தும் விளக்க உரை ஆற்றினார் மகளிர் தோழர்கள் கலைச்செல்வி புவனேஸ்வரி மலர் மகாலட்சுமி செல்வி மஞ்சுளா மங்கலட்சுமி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெரியார் செல்வம் மாவட்ட இளைஞரணி செயலாளர் வேலு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன் மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் மோகன் கவிஞர் தீபக் இந்திரா நகர் கிளைக் கழக தலைவர் பாஸ்கர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் தண்டபாணி நெய்வேலி பாவேந்தர் விரும்பி வடலூர் ஜோதிமணி ஆகியோர் கருத்துரை ஆற்றினர் முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

*/