விருத்தாசலத்தில் நான்கு நாட்களாக குடிநீர் வராததை சாலை மறியல் போராட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 March 2023

விருத்தாசலத்தில் நான்கு நாட்களாக குடிநீர் வராததை சாலை மறியல் போராட்டம்

விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோ. பொன்னேரியில் நான்கு நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஆர். கலைச்செல்வன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.



இதில் கிளை செயலாளர்கள்.வீரமணி, லட்சுமி மாதர் சங்க வட்ட செயலாளர் ஜெயலட்சுமி வாலிபர் சங்க வட்ட குழு உறுப்பினர் சதிஷ் உள்ளிட்ட தோழர் பங்கேற்றனர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேசினார்கள் குடிநீர் கிடைக்காத வரை இங்கிருந்து களைய மாட்டோம் என்று கூறியதன் பேரில் உடனடியாக குடிநீர் உடனடியாக கிடைத்தது.



மேலும் தண்ணீர் கசியக்கூடிய பெரிய நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக சீரமைத்து தருகின்றோம் ,மினி மோட்டார் அமைத்து தருகின்றோம் என அதிகாரிகள் உறுதியளித் தன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

*/