விருத்தாசலத்தில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு ஆற்றுப்படுகையை சுத்தம் செய்யும் பணியை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆய்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 March 2023

விருத்தாசலத்தில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு ஆற்றுப்படுகையை சுத்தம் செய்யும் பணியை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆய்வு.

விருத்தாசலத்தில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு ஆற்றுப்படுகையை சுத்தம் செய்யும் பணியை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆய்வு.



கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உலகப் பிரசித்தி பெற்ற காசியிலும் வீசும் அதிகம் என பெயர் பெற்ற விருத்தாாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரிஸ்வரர் திருக்கோவிலில் வருடம் தோறும் நடைபெற்று வரும் மாசி மக உற்சவ திருவிழாவில் முக்கிய திருவிழாவான இறந்து போன முன்னோர்களுக்கு காசியை போன்று இங்கும் மகம் நட்சத்திரம் அன்று திதி கொடுப்பது ஐதீகம். அதன் தொடர்ச்சியாக மணிமுத்தாற்றில் மழைக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தி அங்கு திதி கொடுக்கும் பக்தர்களுக்கு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 


இப்பணியை தொழிலாளர் நலன் மட்டும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் இப்பணியை பார்வையிட்டார். இதில் நகர செயலாளர் தண்டபாணி,விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், நகராட்சி ஆணையாளர் சேகர், திருக்கோயில் செயல் அலுவலர் மாலா, திருக்கோயில் மேலாளர் பார்த்தசாரதி, துப்புரவு அலுவலர் பூபதி, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

*/