சேத்தியாத்தோப்பில் ஐ சி ஐ சி ஐ வங்கிக்கிளையை புவனகிரி எம்எல்ஏ திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 March 2023

சேத்தியாத்தோப்பில் ஐ சி ஐ சி ஐ வங்கிக்கிளையை புவனகிரி எம்எல்ஏ திறந்து வைத்தார்.

சேத்தியாத்தோப்பில் ஐ சி ஐ சி ஐ வங்கிக்கிளையை  புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன்  திறந்து வைத்தார்.


  

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சென்னை கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள அஜ்மன் காம்ப்ளக்ஸில்   ஐ சி ஐ சி ஐ வங்கியின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. இந்த வங்கிக் கிளையை திறப்பு விழா செய்வதற்கு மரியாதை நிமித்தமாக சிறப்பு விருந்தினராக புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவனை அழைத்திருந்தனர். அதன்படி  அருண்மொழி தேவன் இன்று(03/03/2023) காலை வங்கி கிளைக்கு வருகை தந்து ரிப்பன் வெட்டி வங்கி கிளையைத் திறந்து வைத்தார்.

  

நிகழ்ச்சியில்சேத்தியாத்தோப்பு பேரூராட்சித் தலைவர் தங்க குலோத்துங்கன், கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவைச்ஸ செயலாளர் உமா மகேஸ்வரன், மாவட்ட இளைஞரணித் தலைவர் வீரமூர்த்தி, புவனகிரி மேற்கு  ஊராட்சி ஒன்றிய நிர்வாகி ஜெயசீலன், சேத்தியாத்தோப்பு அதிமுகநகரச் செயலாளர் எஸ் ஆர்.மணிகண்டன், நகரஅவைத் தலைவர் கோழி கோவிந்தசாமி, பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி தெய்வ ராஜ குரு, சேத்தியாத்தோப்புபேரூராட்சி வார்டு கவுன்சிலர் கே பி ஜி கார்த்திகேயன், ராமமூர்த்தி,ஜெய்சங்கர், அக்னீஸ்வரி சிட்பண்ட்ஸ் மகாலிங்கம் மற்றும் வங்கி மேலாளர்,அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொள்ள வந்திருந்தவர்களை அதிமுக நகர முன்னாள் அவைத் தலைவர் சர்புதீன் வரவேற்றார். ஜபருல்லாகான் மற்றும் ஹக்கீம் ஆகியோர் அனைவருக்கும் நன்றி கூறினர்.

No comments:

Post a Comment