ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார் இதனை கொண்டாடும் வகையில் சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாடினர்.
சிதம்பரம் மேல வீதி அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர் மன்ற உறுப்பினருமான தில்லை ஆர் மக்கீன் தலைமை வகித்தார் .
மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம் என் ராதா வரவேற்றார்.ஜமாவட்ட துணைத் தலைவர் ராஜா. சம்பத்குமார் ஆர் சம்பந்த மூர்த்தி ஆர்.வி சின்ராஜ் மாவட்ட செயலாளர்கள் நெல்சன் ஓ.பி .சி. அணி தலைவர் குமரவேல் மாவட்டசெயலாளர்கள் தில்லை செல்வி இந்திரா தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜன் பகவத்சிங் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன் மாநில ஊடகப்பிரிவு பொதுசெயலாளர் சிவசக்தி ராஜா மாவட்ட துணைத் தலைவர்கள் பி வெங்கடேசன் ஜி.கே குமார் ஆட்டோ டி.குமார் இளங்கோவன் டி. பட்டாபிராமன் நகர பொருளாளர் மிஷ்கின் பாய் ஆகியோர்
இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி இளைஞரணி தலைவர் அபு சையத் கலை பிரிவு தலைவர் கே.என். நாராயணசாமி ஆர்.ராஜ்குமார் பாஸ்கர் பிரேம்குமார் அருண் மணி ஓபிசி அணி பாலகிருஷ்ணன் மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் ஜனகம் ராதா அழகர் மாலா ருக்குமணி உட்பட .காங்கிரசை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் நகர காங்கிரஸ் செயல் தலைவர் தில்லை கோ.குமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment