காத்திருப்போர் கூடம் அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 March 2023

காத்திருப்போர் கூடம் அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.

கூத்தன்கோயில் ஊராட்சியில் காத்திருப்போர் கூடம் அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.



சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி, குமராட்சி ஊராட்சி ஒன்றியம், கூத்தன் கோயில் ஊராட்சி, செட்டிமுட்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள காத்திருப்போர் கூடம் கட்டும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.ழ்


இந்நிகழ்ச்சியில் குமராட்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வை.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட கழக இணைச் செயலாளர் எம்.ரெங்கம்மாள், துணை செயலாளர் T.செல்வம் பொதுக்குழு உறுப்பினர் A.கர்ணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 



ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜிபிரம்மராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் கே.ஏ.பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசுகையில்..


சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி, குமராட்சி ஊராட்சி ஒன்றியம், கூத்தன் கோவில் ஊராட்சி செட்டிமுட்டு கிராம பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள காத்திருப்போர் கூடத்திற்கும், இப்பகுதியில் கான்சாக வாய்க்காலில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.1.50 லட்சம் மதிப்பில் படித்துறை அமைக்கும் பணியினையும் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்துள்ளேன். பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்று ஒப்பந்ததாரரை கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். 


நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஒன்றிய மாணவரணி செயலாளர் எம்.ரவிசந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி மணிமாறன், பு.தா.செங்குட்டுவன், ஒன்றிய கழக நிர்வாகிகள் சாந்தி முருகேசன், மணி, ராமலிங்கம், மோகன், வெங்கடேசன், மணிகண்டன், வீரபாண்டியன், குமரேசன், பழனிசாமி, ராஜேந்திரன், இளையராஜா மற்றும் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் கிளை கழக செயலாளர் பிரம்மராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/