காட்டுமன்னார் கோயில் அருகே சொத்து தகராறில் பெரியம்மாவை வெட்டி கொலை!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 2 March 2023

காட்டுமன்னார் கோயில் அருகே சொத்து தகராறில் பெரியம்மாவை வெட்டி கொலை!!

காட்டுமன்னார் கோயில் அருகே  சொத்து தகராறில்  பெரியம்மாவை 
வெட்டி கொலை செய்த  இளைஞரை போலிசார் கைது செய்து விசாரனை. 


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மோவூர் அக்ரஹாரத்தெருவில் வசித்து வரும் மல்லிகா (56) இவரின் தங்கை மகன் தீபராஜ் (33) இவர் இன்று காலை தனது பெரியம்மா மல்லிகாவிடம் சொத்தில் பங்கு கேட்டு தகராறு  ஏற்பட்டு  சம்பத்தின் போது மன்வெட்டியால் தனது பெரியம்மா மல்லிகாவை  வெட்டி கொலை 
செய்யப்பட்டார்.


இச்சம்பவம் உடனடியாக காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி ரூபன் குமார் மற்றும் காட்டுமன்னார் கோயில்  போலிசார் 
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
கொலையாளி தீபராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


சொத்து தகறாரில் தனது பெரியம்மாவை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்புடுத்தியுள்ளது


No comments:

Post a Comment

*/