கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே சாக்காங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசு பள்ளி அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சிங்காரவேல் என்பவர் தனது கால்நடைகளுக்கான தீவனத்திற்கு பயன்படும் நூற்றி இருபது கட்டுக்கள் கொண்ட வைக்கோலை கட்டுகளாக்கி அடுக்கி வைத்திருந்தார். இரவு மழை பெய்யும் என்பதால் தார்ப்பாய் கொண்டு வைக்கோலை மூடியவர் காலையில் வைக்கோல் மேலிருந்த தார்ப்பாயை எடுத்துவிட்டு வயலுக்கு சென்றபோது திடீரென மர்மமான முறையில் வைக்கோல் தீப்பற்றி எரிவதாக அப்பகுதியில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வந்து பார்த்த வைக்கோல்கட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். நீண்ட நேரம் போராடியும் தண்ணீர் ஊற்றிப் பார்த்தும் வைக்கோல் வெயில் நேரம் என்பதால் நன்றாக உள் பகுதியில் எரிந்து கொண்டே இருந்தது.
இதனால் அப்பகுதியில் கடும்புகைமூட்டம் நிலவியது. வைக்கோல் போருக்கு யார் தீ வைத்தது? என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை., வைக்கோல் கட்டு தீ பற்றியதால் இது அப்பகுதியில் பெரும் புகை மூட்டத்தை உருவாக்கியிருந்தது. கால்நடைகளுக்கு மீண்டும் தீவனம்வாங்க எனக்கு வசதி இல்லையே?என்று அந்த விவசாயி கண்ணீர்கலந்த சோகத்துடன் புலம்பியதைப் பார்த்த அப்பகுதியினருக்குமிகவும் வருத்தமாகத்தான் இருந்தது.
No comments:
Post a Comment