விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற திருகொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இத்திருகோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்குனி உத்திர திருவிழாவுக்கு வருகை தருவர்.
இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆலய கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.
10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள், வீதிஉலா ஆகியவற்றை நடைபெறும். ஏப்ரல் 3 தேதி சுவாமி தேரோட்டமும், 4-ந்தேதி பங்குனி உத்திர திருவிழாவும் நடைபெற உள்ளது.
கொடி ஏற்ற விழாவில் மணவாளநல்லூர் ஊராட்சி மன்றத்தலைவர் நீதிராஜன், ஜெயின் ஜுவல்லரி நிறுவனர் அகர்சந்த் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் பழனியம்மாள் மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment