கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் சுரங்க விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிரந்தர பணி வழங்க வேண்டும் எனவும் நிலத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு தொகையை அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும் எனவும் நிலம் வீடு கொடுக்கும் மக்களுக்கு அனைத்து வசதியுடன் கூடிய மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் என்.எல்.சி நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் வருவாய்துறை அதிகாரிகள் நிலம் வீடு வழங்க உள்ள கிராம மக்கள் உள்ளிட்ட முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி கிராம மக்களின் முழு கோரிக்கையை நிறைவேற்றிய பிறகு நிளங்களை கையகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வைத்து நாம் தமிழர் கட்சி சார்பில் நெய்வேலி மந்தார குப்பத்தில் உள்ள நில எடுப்பு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
நெய்வேலி என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
No comments:
Post a Comment