சேத்தியாத்தோப்பு அருகேநெடுஞ்சாலை அருகில் சாக்கடை குட்டையில் ஆண்சடலம் கண்டெடுப்பு
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் புவனகிரி -விருத்தாசலம் சாலையில் சாலையோரம் உள்ள நான்கடி ஆழமுள்ள சாக்கடை இருந்து வருகிறது.இந்தக்
குட்டையில் சுமார் 45வயதுள்ள ஆண்சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்து மிதந்த ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இறந்து கிடந்தவர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். புவனகிரி விருத்தாசலம் சாலையில் மழை நீர் மற்றும் சாக்கடை வடிவதற்காக வெட்டப்பட்ட இந்த பள்ளமானது சரியான திட்டமிடல் இல்லாமல் வெட்டப்பட்டதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதால் இனியாவது இது போன்ற உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment