காட்டுமன்னார்கோயில் அருகே வடவாற்றில் ஆண் சடலம் போலீசார் கை பற்றி விசாரணை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 March 2023

காட்டுமன்னார்கோயில் அருகே வடவாற்றில் ஆண் சடலம் போலீசார் கை பற்றி விசாரணை

காட்டுமன்னார்கோயில் அருகே வடவாற்றில் ஆண் சடலம் போலீசார் கை பற்றி விசாரணை


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வடவார் ஆற்றில் சுமார் 60 வயசு மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக காட்டுமன்னார்கோவிலுக்கு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 


 

சம்பவ இடத்திற்க்கு  காவல் ஆய்வாளர் ஏழுமலை தலைமையில் போலீசார்  வந்து விசாரணை மேற்கொண்டு காட்டுமன்னார்கோயில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பின்பு தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் இடுப்பளவு  தண்ணிரில்  இறங்கி உடலை மீட்டுனர். 


பின்னர்  விசாரணை செய்ததில் நாட்டார்மங்கலம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் கோவிந்தராஜ் வயது 60 என்பது தெரியவந்தது பின்பு  உடலை காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் ஒருவர் இறந்து கிடந்ததால் பரபரப்பு காணப்பட்டது

No comments:

Post a Comment

*/