கடலூர் மாவட்டம் காவல்துறை அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது
உலக மகளிர் தினத்தையொட்டி கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையில் பணியாற்றும் பெண் காவல் அதிகாரிகள், பெண் காவலர்கள், பெண் அமைச்சு பணியாளர்கள்; கலந்த கொண்ட மகளிர் தின விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்கள் கலந்து கொண்டு மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் கவிதைகேற்ப மங்கையராய் பிறந்து காவல்துறையில் பணியாற்றுவது போற்றுதற்குரிய செயலாகும் என வாழ்த்து கூறினார்.
காவல் ஆய்வாளர்கள் திருமதி. சித்ரா, திருமதி. P. கவிதா, திருமதி. துர்கா, திருமதி. தாரகேஸ்வரி, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா, காவல் அலுவலக கண்காணிப்பாளர்கள் திருமதி. ஜான்சி ராணி, திருமதி. பெரியநாயகி, திருமதி. ஜெசி ஆகியோர்கள் மகளிர் தின கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். பெண்களின் பெருமை பற்றி அலுவலக உதவியாளர் திருமதி. வசுந்தராதேவி அவர்கள் பாடல் பாடி கொண்டாடி மகிழ்ந்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. அசோக்குமார், திரு. சீனிவாசலு, துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு. ஸ்ரீதரன், திரு. அசோகன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. செந்தில்விநாயகம் ஆகியோர் மகளிர் தின விழாவில் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
No comments:
Post a Comment