விருத்தாசலம் பாலக்கரையில் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து பாமக சாலை மறியல் ஈடுபட்டனர்
கடலூர் பாமக மாவட்ட செயலாளர்கள் கைது செய்ததை கண்டித்து விருத்தாச்சலத்தில் பாமகவினர் சாலை மறியல் போராட்டம்
என்எல்சி நிர்வாகம் நிலம் எடுப்பதை கண்டித்து வளையமாதேவி பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக கடலூர் மாவட்ட செயலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து விருத்தாசலம் பாலக்கரையில் பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசு, மாநில அரசையும், வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தையும் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் கிடைத்து விரைந்து வந்த விருதாச்சலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து விருத்தாச்சலம் காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment