குறிஞ்சிப்பாடியில் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 March 2023

குறிஞ்சிப்பாடியில் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் குறிஞ்சிப்பாடியில் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.



 



கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்  சார்பில் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 


கடலூர் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் செந்தில் வடிவு அவர்கள் தலைமை வகித்து தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி ஆணையினை வழங்கினார். உதவி திட்ட அலுவலர்கள் முத்துப்பாண்டியன் மற்றும் கஸ்பா அருள் மரியராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


விழாவில் வட்டார இயக்க மேலாளர் சத்தியநாதன் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் வரவேற்புரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வி தகுதியின் அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்தனர். 


இம்முகாமில் 220 இளைஞர்கள் பங்கேற்றனர் அதில் தேர்வு செய்யப்பட்ட 27 நபர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பயிற்சியுடன் கூடிய வேலைக்கான பணி ஆனை வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment

*/