திமுக ஆட்சியில் தான் திருமங்கலம் பார்முலா, ஈரோடு கிழக்கு பார்முலா என புதுப்புது பார்முலாவை உருவாக்கி இருக்கின்றது.
என்று கடலூரில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்
கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா வின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மஞ்சகுப்பம் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட கழக அவைத் தலைவர் சேவல் ஜி.ஜே.குமார் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன், கழக மீனவரணி இணைச் செயலாளர் கே.என்.தங்கமணி. அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர்.வி.ஆறுமுகம், கடலூர் மாநகர பகுதி கழக செயலாளர்கள் பி.கே.வெங்கட்ராமன், வழக்கறிஞர் எம்.பாலகிருஷ்ணன், கெமிக்கல் ஆர்.மாதவன், வ.கந்தன், தங்க.வினோத்ராஜ், கடலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.காசிநாதன், வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் செல்வா.அழகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அம்மா ஜெயலலிதா) கண்ணை இமைக்காப்பது போல் தமிழக மக்களை காப்பாற்றி வந்தவர் ஆசியாவிலேயே ஏழு மொழிகள் பேசக்கூடிய ஒரே ஒப்பற்ற தலைவியாக இருந்தவர். . புரட்சித்தலைவர் (எம் ஜி ஆர்) காலத்தில் 15 லட்சம் ஆக இருந்த கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஒன்றரை கோடி தொண்டர்களாக மாற்றி கட்சியை இந்தியாவின் மூன்றாவது பெரிய இயக்கமாக உருவாக்கியவர் அம்மா ( ஜெயலலிதா) தனக்கு வந்த சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றி காட்டியவர். புரட்சித்தலைவர் (எம் ஜி ஆர்)உடல் நலம் குன்றி அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து கழகத்தை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியவர் அம்மா (ஜெயலலிதா).
ஏழை எளிய மக்களை மேம்படுத்திய பெருமைக்கு உரியவர். 2011-16ஆம் ஆண்டில் 50 கல்லூரிக்கு மேல் தமிழகத்தில் ஆரம்பித்து உயர்கல்வி படிப்பை உருவாக்கித் தந்தவர் அம்மா (ஜெயலலிதா). மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் 52 சதவீதம் அதிகமான உயர்கல்வி படிப்பினை தமிழகத்தில் உருவாக்கி தந்தார். மகளிருக்கென சுய உதவி குழு, ,மகளிர் காவல் நிலையம், மகளிர் கல்லூரி. மகளிர் நீதிமன்றம் என மகளிர் மேம்பாட்டிற்காக ஓயாமல் உழைத்தவர் அம்மா (ஜெயலலிதா).
கருணாநிதி கொண்டு வந்த வீராணம் திட்டம் ஊழலால் தொடங்கப்படாமல் போனது அத்திட்டத்தை புதிய வீராணம் திட்டமாக கொண்டு வந்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றி சென்னையில் கருணாநிதி வீட்டிற்கு குடிதண்ணீர் வழங்கிய வரலாறு அம்மாவிற்கே (ஜெயலலிதா )சொந்தம். அம்மா (ஜெயலலிதா) வழியில் வந்த எடப்பாடியார் தமிழகத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்திற்கு கொண்டு வந்த இந்தியாவின் முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றிருக்கின்றார்.
கடந்த 10 ஆண்டுகளில் கழக ஆட்சியில் கடலூர் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றோம், புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம், கடலூர்கஸ்டம்ஸ் சாலை, சரவணா நகர் இணைப்பு சாலை, கடலூரில் பாதாள சாக்கடை திட்டம், அடிக்கடி இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வதால் புதைவடை மின் கேபிள் திட்டம், புதிய மகப்பேறு மருத்துவமனை கட்டிடம் என சாதனைகளை சொல்லும் திட்டங்கள் பலவற்றை அ தி மு க ஆட்சியில் நிறைவேற்றி இருக்கின்றோம். கடைசியாக அ தி மு க ஆட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் தற்போது பேருந்து நிலையம் அமைக்காமல் வேறு ஒரு தொகுதியில் பேருந்து நிலையம் அமைக்க முயற்சி நடந்து வருகின்றது. இங்கே உள்ள சட்டமன்ற உறுப்பினர் என்ன செய்து கொண்டிருக்கின்றார். ஏன் சட்டமன்ற உறுப்பினர் இதை எதிர்த்து குரல் எழுப்பவில்லை என்று ஓட்டு போட்ட மக்களுக்கு அவர் தெரியப்படுத்த வேண்டும்.
எடப்பாடியார் இன்று எதிர்நீச்சல் போட்டு இந்த கழகத்தை கரை சேர்த்து இருக்கின்றார். ஈரோடு இடைத்தேர்தலில் திமுக மக்களையெல்லாம் ஆடுகளை பட்டியில் அடைப்பது போல் மக்களை ஓரிடத்தில் தினமும் அடைத்து வைத்திருந்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்று இருக்கின்றது. இது ஒரு மாயையான வெற்றி. திமுக ஆட்சியில் தான் திருமங்கலம் பார்முலா, ஈரோடு கிழக்கு பார்முலா என புதுப்புது பார்முலாவை உருவாக்கி இருக்கின்றது. கழகத்தை எடப்பாடியார் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை. விரைவில் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் கழகம் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் கழக ஆட்சியை அமைக்கும் என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர்கள் தெய்வ.பக்கிரி, மணிமேகலை தஷ்ணா, அண்ணாகிராமம் ஒன்றிய கழக செயலாளர்கள் வி.எம்.தமிழ்ச்செல்வன், கே. எம்.நாகபூஷணம், பண்ருட்டி ஒன்றிய கழக செயலாளர் எம். சிவா, பண்ருட்டி நகர செயலாளர் தாடி.முருகன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் கி.காசிநாதன், பேரூர் கழக செயலாளர்கள் தொரப்பாடி டி.கனகராஜ், மேல்பட்டாம்பாக்கம் ஏ.அர்ஜுனன், பொதுக்குழு உறுப்பினர் கே.ராமசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் என்.வரதராஜன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆர். ஏழுமலை, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எம். முகமத்சாலி, தலைமை கழக பேச்சாளர்கள் புலிசை சந்திரகாசன், கடலூர் இரா.அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் தமிழ்செல்வி ஆதிநாராயணன், கல்யாணி ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.கே. வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதி என்.சுரேஷ்பாபு நன்றி கூறினார்.
.
No comments:
Post a Comment