சேத்தியாத்தோப்பு அருகே சோழத்தரத்தில் கோயில் உண்டியல் திருட்டு.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சோழத்தரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வயல்வெளிப் பகுதியில் ஸ்ரீ காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத வயல்வெளிப் பகுதியில் உள்ள கோவிலாக இருப்பதால் இந்த கோவிலில் நுழைந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்தப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கோவிலின் பூசாரி விஸ்வநாதன் என்பவர் சோழத்தரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஸ்ரீ காத்தாயி அம்மன் கோவிலில் திருடப்பட்ட
பணத்தின் மதிப்பு மற்றும் வேறு ஏதேனும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். திருடர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என்பதே கிராமத்தினரின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment