புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன்நெய்வேலி என்எல்சி நிறுவனம்பற்றி கண்டன அறிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 20 March 2023

புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன்நெய்வேலி என்எல்சி நிறுவனம்பற்றி கண்டன அறிக்கை.

 
புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன்நெய்வேலி என்எல்சி நிறுவனம்பற்றி கண்டன அறிக்கை.
 கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து விவசாயத்தை நாசமாக்கி, நிலத்தடிநீரை பாழாக்கி, சுகாதார சீர்கேடுகளை உருவாக்கி மக்கள் வசிப்பதற்கு தகுதியற்ற மாவட்டமாக மாற்றி வருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.


தற்போது சேத்தியாத்தோப்பு கிழக்குப் பகுதி நிலக்கரி சுரங்கம் என்ற பெயரில் அம்பாள்புரம், தலைக்குளம், நத்தமேடு, கிருஷ்ணாபுரம், வடக்குத்திட்டை, முத்துகிருஷ்ணாபுரம், தெற்குத்திட்டை, மணவெளி, வண்டுராயன்பட்டு, உடையூர், பூதவராயன்பேட்டை, புவனகிரி, அழிசிக்குடி, ஒரத்தூர், சாவடி, நகரமலை, சின்னநத்தம், மிராளூர், மஞ்சக்கொல்லை உள்ளிட்ட 20 கிராமங்களில் 21,000 ஏக்கர் காவிரி டெல்டா பகுதியை சார்ந்த, விவசாயத்தை பாதுகாக்க மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்கள் உத்திரவிட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருகின்ற முப்போகம் விளையக்கூடிய நிலங்களை ஆர்ஜிதம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. 


ஏற்கனவே நில எடுப்பு என்ற பெயரில் என்எல்சியின் கொடுமைகளை எதிர்த்து ஒட்டுமொத்த கடலூர் மாவட்ட மக்களும், விவசாயிகளும் தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டு உள்ள நிலையில், அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் எதையும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல,என்எல்சி நிறுவனம் நிறைவேற்றாத நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, தொடர்ந்து மக்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசு  துரோகம் செய்து வருகிறது. மத்திய பாஜக அரசின் அடிமை போல, நில எடுப்புக்கு  ஆளும் தி. மு.க. அரசும் தொடர்ந்து துணை போகிறது. 


எனவே நில எடுப்புத் திட்டங்களை உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்துவதோடு, மத்திய, மாநில அரசுகளின் தொடர் மக்கள் விரோத செயல்பாடுகளை இதன்மூலம் வன்மையாக கண்டிக்கிறேன்.


   இவ்வாறு மேற்கண்ட அறிக்கையை என்எல்சி நிறுவனத்தைக் கண்டித்துதனது அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், கடலூர்  மேற்கு மாவட்டச் செயலாளருமாகிய ஆ.அருண்மொழிதேவன்.

No comments:

Post a Comment