சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு செவன்த் டே எஸ் டி ஈடன் பள்ளியில் நடந்தஆண்டு விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 19 March 2023

சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு செவன்த் டே எஸ் டி ஈடன் பள்ளியில் நடந்தஆண்டு விழா.

சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு செவன்த் டே எஸ் டி ஈடன் பள்ளியில் நடந்தஆண்டு விழா.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் அமைந்துள்ளது செவன்த் டே எஸ் டி ஈடன் மெட்ரிகுலேஷன் பள்ளி. இந்தப் பள்ளியில் 630 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக 100சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதாக இப்பள்ளியின் தாளாளர் தீபக் தாமஸ் பெருமையுடன் குறிப்பிடுகிறார். மேலும் இவர் கூறும்போது நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும் நமது வாழ்க்கை ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியதை நினைவில் கொண்டு அதே நோக்கத்தில் தான் எங்கள் பள்ளியின் மாணவர்களை அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் பெற பயிற்சிக் கொடுத்து மாவட்டத்திலேயே முதன்மை பெற்ற பள்ளியாக உருவாக்கப் பாடுபடுகிறோம் என்று கூறினார்.


      

இந்தப் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக சேத்தியாத்தோப்பு பேரூராட்சி மன்றத் தலைவர் தங்க குலோத்துங்கன், அரிமா சங்கத்தின் மாவட்ட நிர்வாகி டாக்டர் மணிமாறன், சேத்தியாத்தோப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பலவித பரிசுகளை வழங்கினார்கள். 

 

இந்தப் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தற்காப்பு கலையான கராத்தே, சிலம்பம்,வாள் சண்டை, யோகா பயிற்சி, பாடலுக்கேற்ற நடனம், பரதநாட்டியம், சுருள்கத்திவீசுதல், இப்படி பலவித நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக செய்து காட்டினர். இதற்கான பயிற்சி கொடுத்த ஆசிரியர்கள் மிகவும் சிறப்பாக பயிற்சி கொடுத்திருந்தனர்.  குறிப்பாக தனுஸ்ரீ என்கிற ஒன்றாம் வகுப்பு மாணவி திருக்குறளில் 30 குறௌல்களை மனப்பாடமாக திக்கல் திணறல் இல்லாமல் ஒப்பித்தது பார்வையாளர்கள் பெற்றோர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. மரங்களை காப்போம் என்ற தலைப்பில் பேசும் படமாக வசனம் இல்லாமல் தங்கள் நடிப்பின் மூலம்  மரங்களை வெட்டாதீர்கள் என்று கூறி மரத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதை மிகவும் தத்ரூபமாக பள்ளி மாணவர்கள் நடித்துக் காட்டியது மிகச் சிறப்பான நிகழ்ச்சி.


    தங்கள் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சிக்குவந்திருந்த அனைவருக்கும் பள்ளியின் தாளாளர் தீபக் தாமஸ் மற்றும் முதல்வர் சுகிர்தா தாமஸ் ஆகியோர் தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

*/