தேசிய மகளிர் ஆணையத்தின் மகளிருக்கான வட்ட சட்ட பணிகள் குழு விழிப்புணர்வு முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 March 2023

தேசிய மகளிர் ஆணையத்தின் மகளிருக்கான வட்ட சட்ட பணிகள் குழு விழிப்புணர்வு முகாம்.


தேசிய மகளிர் ஆணையத்தின் மகளிருக்கான வட்ட சட்ட பணிகள் குழு விழிப்புணர்வு முகாம். 


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கட்சிப்பெருமாநத்தம் கிராமத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் மகளிருக்கான வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 


இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஏ.கே.சமூகநல அறக்கட்டளையின் நிறுவன தலைவர் வழக்கறிஞர் அகிலன், வழக்கறிஞர் குமரகுரு, ஜெயஸ்ரீ மற்றும் வட்டசட்டபணிகள் குழு அலுவலர் அஸ்வத்தாமன் ஆகியோர் கலந்து கொண்டு சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறித்தும், அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் 1977 முதல் இதற்கான ஆணையம் உருவாக்கப்பட்டு ஏழை எளிய மக்களின் அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் சட்ட உதவி மற்றும் சட்ட ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் வழக்கறிஞர்கள் தெளிவுபடுத்தினர். பெண்கள், பள்ளி மாணவிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயணடைந்தனர்,

முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேனா, புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

*/