கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தது.
இதனை அடுத்து குறிஞ்சிப்பாடியில் கடை அடைப்புக்கு வணிகர்கள் 90 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு செய்து வருகின்றனர்.
இதனால் ஜவுளிகடைகள், மளிகை கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்காமல் மூடியே வைத்துள்ளனர்.
இந்நிலையில் குறிஞ்சிப்பாடியில் வணிகர்கள் திறந்து வைத்துள்ள மேலும் ஒரு சில கடைகளையும் மூட சொல்லி முன்னாள் பாமக மாநில துணை பொது செயலாளர் தர்மலிங்கம், மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விஜய் வர்மராயர், நகர செயலாளர் நடராஜன் மாவட்ட துணை தலைவர் குமரவேல், ஒன்றிய செயலாளர் செந்தில், வேல்முருகன் உட்பட 30 நபர்கள் குறிஞ்சிப்பாடி போலிசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment