கடலூர் மாவட்டம்விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்
விருத்தாசலம் வருவாய் வட்டத்தில் 17 கிராம உதவியாளர் பணி நியமனத்தில் மதிப்பெண் பட்டியல் போலியாக தயாரித்து வழங்கிய பணி நியமன ஆணையை ரத்து செய்து தகுதியான நபர்களை பணி நியமனம் செய்யக்கோரியும்
மேலும் பணி நியமன கோப்புகளை விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்காமல் சட்டவிரோதமாக முன்னாள் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் தனபதி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் அந்த செயலுக்கு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் உடந்தையாக இருப்பதை கண்டித்தும்
தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 இன் கீழ் கேட்கப்படும் தகவல்கள் மற்றும் ஆவணங்களை வழங்க கோரியும்
17 கிராம உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடு செய்த முன்னாள் வட்டாட்சியர் தனபதிக்கு ஏஜென்ட் வேலை பார்த்த வட்டாட்சியரின் வாகன ஓட்டுனர் பாலமுருகனை கண்டித்தும்
தமிழ்நாடு மக்கள் இயக்கம் மாநில தலைவர்ஊடகவியலாளர் மாய..முனுசாமி தலைமையில்,மாநில பொது செயலாளர் காமராஜ், வி, சி, க,மாநிலமுற்போக்கு மாணவர் கழகதுணைச் செயலாளர் நீதி வள்ளல்,இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ராஜசேகர் முன்னிலையில்,முழக்கங்களிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்செய்தனர்
இதில் ஆதி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் திருமாறன், இந்திய குடியரசு கட்சி மாநில இணை பொது செயலாளர் மங்காபிள்ளை, CUPI மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன், மூத்த பத்திரிகையாளர் மலர்தாசன், விசிக ஊடக மைய மாநில துணை செயலாளர் ராஜ்குமார், நகர பொருளாளர் மேட்டு காலணி முருகன், தமிழ்நாடு மக்கள் இயக்கம் மாநில பொருளாளர் வழக்கறிஞர் சண்முகவேல், பூவனூர் எல்ஐசி குமார், ஒன்றிய துணை செயலாளர் கோடிசுந்தரம் நகர செயலாளர் வயலூர் இளங்கோவன், செய்தியாளர் வேல்முருகன், கோதண்டராமன், எழில்வான் சிறப்பு, ஐயப்பன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர் முடிவில் சமூக ஆர்வலர் ஞானக்கண்ணன் நன்றி கூறினார்
No comments:
Post a Comment