கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில்என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் மனைகளை கையகப்படுத்தியுள்ளது. மேலும் இதனைச்சுந்றியுள்ள கத்தாழை,மும்முடிசோழகன்,வளையமாதேவி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு எடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் கரிவெட்டி கிராமத்திற்கு என்எல்சி அதிகாரிகள், வருவாய்த் துறையினர் துணையுடன், போலீசார் பாதுகாப்புடன் மனைகளை அளவீடு செய்ய வருகை தந்தபோது கிராமமக்கள் அளக்க விடாமல்தடுத்து நிறுத்தி எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டு அளப்பதற்கு வாருங்கள். அப்போதுதான் நாங்கள் எங்கள் நிலம் மனைகளை அளந்து ஒப்படைக்க முன்வருவோம் என்று கரராகக் கூறி அளவீடு செய்ய விடாமல் தடுத்து விட்டனர்.
வருவாய் அதிகாரிகளும் என்எல் சி நிர்வாகமும் நிலங்களை அளக்காமலேயே திரும்பிச் சென்று விட்டனர்.இதில் என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்து இப்பகுதி விவசாயி ஒருவர் தன்மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைக்க முயற்சித்தபோது தண்ணீரை ஊற்றி அதை தடுத்து நிறுத்திய சம்பவமும் நடந்தது.
இத்தகைய சூழ்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சட்டமன்றத்தில் இது சம்பந்தமாக குரல் கொடுத்ததையடுத்து அந்தக் கட்சியின்நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட கரிவெட்டி கிராமத்திற்கு 21/03/2023 இனறு சென்று நிலம்,மனை கொடுத்த கிராமத்தினருடன் கலந்து ஆலோசனை செய்தனர். நிலம் மனை கொடுத்தவர்களின் கோரிக்கைகள் நிறைவேற நாங்கள் இந்த கிராமத்தினருக்கு பக்கபலமாக இருப்போம் என்று கூறினர்.
No comments:
Post a Comment