விருத்தாசலத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 March 2023

விருத்தாசலத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம்

விருத்தாசலம் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது


இந்தசெயற்குழு கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். 


  • கூட்டத்தில் தீர்மானங்களாக பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் தொடர வேண்டும்
  • இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்
  • அகவிலைப்படி நிலுவைத் தொகையினை உடனே வழங்கிட வேண்டும்
  • மேற்படிப்பு படித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும்
  • ஈட்டியை விடுப்பை ஒப்படைப்பு செய்து ஊதியம் ஆக்கி தர வேண்டும்
  • உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


இந்த தீர்மானங்கள் குறித்து தமிழக முழுவதும் இருந்து மாவட்டம் தோறும் வந்திருந்த நிர்வாகிகள் தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைத்தனர்


மாநிலத் தலைவர் ரங்கராஜன் சிறப்புரையாற்றினார் செய்தியாளர்களிடம் கூறியபோது

தமிழக முதல்வர் அவர்களுக்குவாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் ஏனென்றால் அவருடைய பிறந்தநாளில் ஆசிரியர் நலன் சார்ந்து திட்டங்களுக்கு ரூ225 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்அதற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்


தேசிய கல்விக் கொள்கையை இந்தியா முழுவதும் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது அது குறித்து மாநில தமிழக அரசு எந்தவித முடிவும் எடுக்காத நிலையில் நாங்கள் குழப்பத்தில் இருக்கிறோம்


தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துகிறதா இல்லையா என எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் அப்போதுதான் நாங்கள் அதன்படி செயல்பட முடியும் எனவும்


மேலும்தங்களுடைய வாழ்வாதார பிரச்சனையாக உள்ள 20 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தருமாறு வலியுறுத்துகிறோம்


தேர்தல்அறிக்கையில் தமிழக முதல்வர் கூறியதை போல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியதை முதல்வர் அவர்கள்நிறைவேற்றிட வேண்டும் 


எனகேட்டு கடந்த 28ஆம் தேதி ஒரு லட்சம் அஞ்சல் அட்டையை முதல்வருக்கு அனுப்பும் போராட்டம் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு செல்லும் போராட்டம் மற்றும் வரும் 18-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரக போராட்டம் மாநில பொறுப்பாளர்கள் உண்ணாவிரத போராட்டம் மே 2 மறியல் போராட்டம் எனபல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த உள்ளோம் எனவும் 


இதுகுறித்து நேரடியாக தமிழக முதல்வர் எங்களை அழைத்து பேசவேண்டும் எனகேட்டுக்கொள்கிறோம் எனகூறினார் 


மேலும் எண்ணும் எழுத்தும் என்னும் திட்டம் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை திட்டமாகும் அதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறதுஇந்த திட்டத்திற்கு ஆசிரியர்கள் சொந்த செலவில்வாங்கும் பொருட்களுக்கானநிதியை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

மாநில தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர அந்தோணி ஜோசப் வரவேற்புரை ஆற்றினார். சுதாகரன் முன்னாள் மாநில தலைவர் முன்னாள் முன்னிலை வகித்தார்.

மாவட்ட ஓய்வு பிரிவு செயலாளர் வி. நாராயணன் முன்னாள் மாநில ஓய்வு பிரிவு செயலாளர் ஆறுமுகம் மாவட்ட தலைவர் பிரபாகரன் பொருளாளர் சுரேஷ் . மாநில செயற்குழு சகாயதேவதாஸ் . கொளஞ்சியப்பன். சத்திய பிரியா. சிறப்பு அழைப்பாளர் மாநில பொதுச்செயலாளர் ரெங்கராஜன் செயற்குழு வை வழிநடத்தி தீர்மானம் நிறைவேற்றியவைகளை ஒப்புதலளித்து விளக்கவுரை ஆற்றினார். மாநில பொருளாளர் குமார் நன்றி கூறினார். இதில் கலந்து கொண்டோர் 38 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment