குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுப்படி விவசாயிகளுக்கான குறை தீர்ப்பு கூட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேளாண் உதவி இயக்குனர்கள் மற்றும் வட்டாட்சியர் சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும் என்று குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளித்தனர் விவசாயிகள் அலகழிக்கப்படாமல் தங்கள் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எளிதில் சென்று பயன்பெறும் வகையில் உள்ளது என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment