காசியை விட வீசம் பெரிது என்பதற்கு ஏற்ப காசியில் நீராடிய புண்ணியத்தை விருத்தகாசி என்றழைக்கப்படும் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி புண்ணிய நதியான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைந்து ஆசி வழங்குவார்கள் என கூறப்படுகிறது. இதனால் ஆண்டு தோறும் மணிமுக்தாற்றில் நடக்கும் மாசி மகத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
அதன்படி மாசிமகத்தையொட்டி இன்று தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான மக்கள் மணிமுக்தாற்றில் குவிந்தனர். இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த ஊற்றுகளில் நீராடி, தங்களது முன்னோா்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் ஆற்றங்கரை விநாயகரை தரிசனம் செய்து விட்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment