கடலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் பணி நிரந்தர செய்ய வேண்டும்
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு தமிழ்நாடு அரசு அனைத்து துறை இரவு காவலர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் உதயகுமார் கோரிக்கை மனு அளித்தார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் அழிஞ்சிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு அனைத்து துறை இரவு காவலர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் உதயகுமார் கடலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் கூறியதாவது தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை நிரந்தரமாக்குவதற்கு அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடலூர் கல்வி மாவட்டத்தில் மொத்தம் ஏழு ஒன்றியங்கள் உள்ளன தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய அரசானை வெளியிடப்பட்டுள்ளது அரசானை எண் 385 அதன்படி காட்டுமன்னார்கோயில் ஒன்றியத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மொத்தம் 56 குமராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் 45 குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் 111 கடலூர் ஒன்றியத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் 27 கீரப்பாளையம் ஒன்றியத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் 35 மற்றும் அண்ணா கிராமம் ஆகிய கிராமங்களில் பணி புரிந்து வரும் துப்புரவு பணியாளர்கள் ஆக மொத்தம் 274 நபர்களின் பெயர் பட்டியல் சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக தாங்கள் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்கள் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கோரிக்கை மணுவில் குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment