குமராட்சி ஊராட்சியில் கேக் வெட்டி மகளிர் தின கொண்டாட்டம்.
குமராட்சி ஊராட்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஊராட்சியில் பணிபுரிகின்ற தூய்மை பெண் காவலர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் வாழ்த்துக்கள் தெரிவித்து அனைவருக்கும் சேலை வழங்கினார்.
முன்னதாக சக பணியாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார் உடன் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் உமாமகேஸ்வரி விஜயகுமார் வார்டு உறுப்பினர் ராஜலட்சுமி ஊராட்சி செயலர் சிலம்பரசன் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் சிங்கராசு மாஅரசூர் ஊராட்சி மன்ற தலைவர் அருணா செல்வகுமார் வெண்ணையூர் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும் மணி ரமேஷ் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment