புவனகிரி அருகே மருதுாரில் குடியிருப்பு மற்றும் தோட்டங்கள் உள்ளிட்ட பகுதியில் வருவாய்த்துறையினர் வரைபடத்துடன் ஆய்வு செய்ததால் பரபரப்பான சூழ் நிலை காணப்பட்டது.
கடலுார் மாவட்டம், புவனகிரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட சேத்தியாத்தோப்பு நகரப் பகுதியை மையமாக கொண்டு கிழக்குப் பகுதி சுரங்கத் திட்டம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட அம்பாள்புரம், தலைக்குளம், நத்தமேடு, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களை உள்ளடக்கி 21 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
தற்போது புவனகிரி தொகுதி பகுதியில் விவசாய நிலங்களை என்.எல்.சி., விரிவாக்கப்பணிகளுக்கு வழங்க விவசாய சங்கங்கள் தவிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் பா.ம.க., சார்பில் சமீபத்தில் ஒரு நாள் கடையடைப்பு நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் த.வா.க., சார்பில் கண்டன போஸ்ட்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மருதுாரில் வருவாய்த்துறை சார்பில் புவனகிரி வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் குடியிருப்பு மற்றும் தோட்டங்கள் உள்ளிட்ட பகுதியில் நேற்று திடீர் என நிலத்திற்கான வரைபடங்களுடன் ஆய்வு செய்தனர்.
இது குறித்து அப்பகுதியினர் கேட்டதற்குவருவாய்த் துறையினர் எந்த பதிலும் கூறாததால் பரபரப்பான சூழ் நிலை ஏற்பட்டது.
No comments:
Post a Comment