கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சாத்தமங்கலம் கிராமத்தில் இருந்து ஓடாக்கநல்லூர் செல்லும் சாலை செல்கிறது.இந்த சாலை இப்பகுதியில் உள்ளபத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் பயன்பாட்டிற்கு பயன்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த சாலையில் 2 பாசன வாய்க்கால் பாலங்கள் இருந்து வருகின்றன.
இந்த பாலங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில்இருந்து வருவதால் சேதம் அடைந்துள்ளன.பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளன. பாலத்தின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து, கம்பிகள் துருப்பிடித்துள்ளன. உடனடியாக பாலங்களை சரி செய்யாமல் விட்டால் மீண்டும் விரிசல் அதிகமாகி பயன்படுத்த முடியாத நிலையாகி விடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இதை பயன்படுத்தும் 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்தப் பாலத்தை பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்தபப் பாலங்களை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும் என பாலத்தைப் பயன்படுத்தும் கிராமத்து மக்கள் கோரிக்கை வைக்கின்றனர.
No comments:
Post a Comment