கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் பல்வேறு பணிகள் பாதிப்படைந்து வருகிறது.
என்று கூறி புவனகிரி பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியின் திமுக அல்லாத கவுன்சிலர்களில் சிலபேர் புவனகிரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த அவர்கள் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் பின்னர் அவர்களாகவே கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அனைத்து கவுன்சிலர்களும் தெரிவிக்கையில் உடனடியாக புவனகிரி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிக்கவேண்டும். தற்போது வேறு பகுதியில் பணியாற்றும் செயல் அலுவலர் புவனகிரி பேரூராட்சியில் பொறுப்பு செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். இதனால் அவருக்கு பணிச்சுமை அதிகரிப்பதோடு, பணிகளை விரைவாகவும் சரியாகவும் செய்ய முடியாமல் போகிறது.
அதனால் புவனகிரி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமித்து பேரூராட்சியின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டு மெனவும் அவர்கள் தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment