ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 March 2023

ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.


கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகேகடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற 100 நாள் வேலைத்திட்ட பணிக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 


இதில் வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்த ஆய்வு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கிராம மக்களும் அதிக அளவில் பங்கேற்ற நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 நாள் வேலைத்திட்ட பணிகளில்  பல லட்சம் ரூபாய் மதிப்பில்


முறைகேடுகள்  நடைபெற்று இருப்பதாக கிராம மக்கள் கடும் குற்றச்சாட்டை வைத்தனர். ஆனால் இதற்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் பெயரளவிற்கு 100 நாள் வேலைத் திட்ட சமூக தணிக்கையை செய்து மேற்கொண்டு எவ்விதப்பதிலும் கூறாததால் கிராம மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் 100 நாள் வேலை திட்டப் பணிக்கான தணிக்கை நோட்டை கிராம மக்களில் சிலர் கைப்பற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.அப்போது உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதால் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு நடந்தவற்றை காவல்துறையினரிடமும் விளக்கிக் கூறிய கிராம மக்கள், 100 நாள் வேலைத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட பயனாளிகள்ண


சமூக தணிக்கை நோட்டை 


 ஸ்ரீமுஷ்ணம் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கொடுத்து மீண்டும் கிராமத்தில் நேர்மையான முறையில் 100 நாள் வேலைத்திட்ட சமூக தணிக்கை செய்யுமாறு அறிவுறுத்த இருப்பதாக அவர்கள் கூறினர். இந்நிலையில் சொன்னது போலவே கிராம மக்களில் சிலர் ,


100 நாள் வேலைத்திட்டப் பயனாளிகளில் பாதிக்கப்பட்ட சிலர் ஸ்ரீமுஷ்ணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சமூக தணிக்கை நோட்டை காட்டி கேட்கும்போது அதிகாரிகள் இதற்கு பதில் அளிக்காமல் அதிகாரிக்குக் கீழே உள்ள நபர்கள் இதுகுறித்து பதில் கூற முற்பட்டனர். ஆனால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் கேட்ட கேள்விக்கு தெளிவான பதில் 


அளிக்கவில்லை. முக்கியமாக இந்த நூறு நாள் வேலைத்திட்ட மோசடியில் பலருக்கும் பங்கு இருப்பதாகவும் மீண்டும் நேர்மையான முறையில் 100 நாள் வேலை செய்யும் பணிகளுக்கான சமூகக் கணக்கு தணிக்கை ஆய்வு செய்தால் மட்டுமே இதில் உள்ள உண்மை வெட்ட வெளிச்சத்திற்கு வரும் எனவும் கூறுகின்றனர். மேலும் ராமாபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும் நேர்மையான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/