புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் அவதூறு பிரசாரம் செய்து வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் சிதம்பரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரகுபதியிடம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா புகார் புதன்கிழமை அன்று மனு அளித்து வலியுறுத்தினார். அவருடன் கடலூர் மாவட்ட துணைத் தலைவர் ஆர் சம்பந்தமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள் ரகோத்தமன், மாதவன் ஆகியோர் உடன் இருந்தனர்
மனு விபரம்: தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. ஆனால் அப்படி யாரும் தாக்கப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டுக்கே எதிரானவர்கள்.
அவர்களை வைத்து சிலர் கீழ்த்தரமாக அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் தி.மு.க அரசும் தமிழ்நாட்டு மக்களும் அரணாக இருப்பார்கள்" எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ள்நோக்கத்தோடு சீமான் தன் விளம்பரத்திற்காக தமிழக மக்களுக்கும், வட இந்திய தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சனையை தூண்டிவிடும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கக்கூடிய வகையில் சீமானின் பேசி வருகிறார்.
அவர் மீது வழக்கு பதிவு செய்து உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிடடி தலைவர் கே.எஸ.அழகிரி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்களிடத்தில் உண்மைக்கு புறம்பாக வன்முறையை தூண்டும் வகையில் அவதூறு பிரச்சாரம் செய்து வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை உடனடியாக கைது செய்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment