கடலூர் மாவட்டம் கீழ் புவனகிரியில் அமைந்துள்ளது ரெயின்போ ஆங்கிலவழி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி. இப்பள்ளியில் (08/03/2023) புதன்கிழமை உலக மகளிர் தினம் மற்றும் பசுமை தினம் இவை கடைபிடிக்கப்பட்டது. அனைத்து மாணவ, மாணவிகளும் ஆசிரியைகளும் பச்சை நிற ஆடையை உடுத்தி தங்கள் ஆடையின் மூலம் பசுமை நிறைந்த உலகமே சுத்தமான,சுகாதாரமான, இயற்கையான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பதை எடுத்துக் காட்டினர்.
இந்த மகளிர்தினம் மற்றும் பசுமை தினத்தை முன்னிட்டு பள்ளியின் தாளாளர் ரவிச்சந்திரனின் வழிகாட்டுதலில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் இணைந்து பசுமையைப் பேணி பாதுகாக்கவும் மற்றும் சுற்றுப்புறத்தில்மாசற்ற காற்றை ஏற்படுத்தி, இயற்கையைப் பேணிக் காத்திடவும் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டனர். இந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பள்ளியின் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் மரக்கன்றுகளை நட்டனர். அத்துடன் பெண்களின் உயர்வுப் பற்றியும் பெண் கல்வியின் அவசியம் பற்றியும் பெண்கள் நாட்டின் கண்கள், பெண்களைப் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் சமுதாயக் கடமை என்கிற உயரிய கருத்தைப் பற்றியும் சிந்திக்கப்பட்டது.
No comments:
Post a Comment