கடலூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர் மீரா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் யானைக்கால் நோய் மேலாண்மை மாவட்ட அளவிலான சுய பாதுகாப்பு செயல்முறை பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்குதல் நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலா தலைமையில் மாவட்ட மலேரியா அலுவலர் கஜபதி, மண்டல பூச்சிகள் அலுவலர், இளநிலை பூச்சிகள் அலுவலர் மூர்த்தி மற்றும் மாவட்ட நோய் தடுப்பு அலுவலர் முன்னிலையில் வடலூர் ஓ பி ஆர் நினைவு வளாகத்தில் நடைபெற்றது.
இதில் யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் தொற்றிலிருந்து சுய பாதுகாப்பை பேணுவது குறித்து செயல்முறை விளக்கம் மற்றும் சுகாதார வழிமுறைகள் அதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் வட்டார மேற்பார்வையாளர்கள் சுகாதார ஆய்வாளர்கள் டெங்கு பணியாளர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment